மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைப்பெற்ற போட்டியில் ஐதராபாத் – லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வில்லியம்சன் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் சுந்தர் சூழலில் சிக்கினார். அனுபவ வீரர் மனிஷ் பாண்டே 11 ரன்களில் வெளியேற ஒரு கட்டத்தில் லக்னோ அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
தொடக்க வீராக களமிறங்கி நிலைத்து நின்று விளையாடி வந்த அணியின் கேப்டன் ராகுல் , தீபக் ஹூடா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தீபக் ஹூடா 51 ரன்னிலும் கேப்டன் ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி ஓவரில் இளம் வீரர் ஆயுஷ் படோனி – ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடி காட்ட லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. 170 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அபிஷேக் சர்மா – ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர்.
அபிஷேக் சர்மா 13 ரன்களில் வெளியேற ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்து க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 12 ரன்களில் க்ருனால் சுழலில் சிக்கினார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் – நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடி வந்த பூரன் 34 ரன்களில் அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதற்கு அடுத்தப் பந்திலே அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது . இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.