இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வா…? கேள்வி எழுப்பிய வர்ணனையாளர்… சிரித்தபடியே பதிலை சொன்ன தோனி…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
3 May 2023, 5:14 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய லக்னோ அணி சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தது. அதிரடி வீரர் மேயர்ஸ் (14), வோரா (10), குர்னல் பாண்டியா (0), ஸ்டொயினிஸ் (6), கரன் சர்மா (9) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். அந்த 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

இதனிடையே, 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிகோல்ஸ் பூரன், பதோனி சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறது.

முன்னதாக, டாஸ் போடும் போது சென்னை அணியின் கேப்டன் தோனியிடம், இந்த ஐபிஎல் தொடருடன் நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா..? என வர்ணனையாளர் டேனி மாரிசன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சிரித்தபடி பதிலளித்த தோனி, “இது எனது கடைசி சீசன் என நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல,” எனக் கூறினார். இதனை கேட்ட மாரிசன், அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் என்று ரசிகர்களை நோக்கி கூறினார். இதனால், மைதானத்தில் இருந்த தோனி ரசிகர்கள், பலத்த கரகோஷத்தை எழுப்பினர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!