ஒரு வழியா ஜெயிச்சாச்சு… 8 தொடர் தோல்விக்கு பிறகு மும்பை அணிக்கு முதல் வெற்றி : சூர்யகுமார், திலக் அபாரம்..

Author: Babu Lakshmanan
30 April 2022, 11:48 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, வழக்கம் போல பட்லர் அதிரடி காட்டினார். மற்ற வீரர்கள் ஓரளவுக்கு மட்டுமே தாக்கு பிடித்த நிலையில், அவர் 67 ரன்கள் குவித்து அணியின் ரன்குவிப்புக்கு காரணமாக இருந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (2) ஏமாற்றம் அளித்தாலும், இஷான் கிஷான் 26), சூர்ய குமார் யாதவ் (51), திலக் வர்மா (35) என அடுத்தடுத்து சிறப்பாக விளையாட, மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் டேனியல் சாம்ஸ் சிக்சர் அடித்து மும்பை அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.

இதன்மூலம் 8 தொடர் தோல்விக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது மும்பை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • vadivelu shared about the sad experience of gap in acting என்னைய நடிக்கவிடக்கூடாதுனு சொன்னாங்க; அரசியல் காரணமா?- மனம் நொந்து போய் பேசிய வடிவேலு