IMPACT பிளேயராக வந்து ஏமாற்றம் கொடுத்த டூபிளசிஸ்… நடையை கட்டிய மேக்ஸ்வெல்.. பெங்களூரூவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா..?
Author: Babu Lakshmanan26 April 2023, 10:01 pm
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடின இலக்கை நோக்கி பெங்களூரூ அணி பேட்டிங் செய்து வருகிறது.
பெங்களூரூ சின்னசுவாமி மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆட்டத்திலும் டூபிளசிஸ் இம்பேக்ட் வீரராகவே களமிறங்கினார்.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. ஜெஷன் ராய் (56), ஜெகதீசன் (27) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, வெங்கடேஷ் ஐயர் (31), கேப்டன் ரானா (48) என அதிரடியாக ஆடியதால் மளமளவென ரன் குவிந்தது.
இதைத் தொடர்ந்து, இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு டூபிளசிஸ் (17), ஷபாஸ் அகமது (2), மேக்ஸ்வெல் (5) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். கேப்டன் கோலி மட்டும் தனியாளாக போராடி வருகிறார்.