பரபரப்பான கட்டத்தில் SRH – RCB ஆட்டம்… மேஜிக் செய்யுமா ஐதராபாத்…? போட்டியின் முடிவுகள் யாருக்கு சாதகம்.. பாதகம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
18 May 2023, 7:18 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி, பிளே ஆப்பிற்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஐதராபாத்தில் இன்று நடக்கும் 65வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ரன்-ரேட்டில் (+0.166) வலுவான நிலையில் இருக்கும் பெங்களுரூ, எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்பிற்கு முன்னேற முடியும். இதில் ஒன்றில் தோற்றாலும் கூட மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அடுத்த வாய்ப்பு இருக்கும். எனவே அந்த அணிக்கு இன்றைய ஆட்டயம் மிகவும் முக்கியமானதாகும்.

அதேபோல, ஐதராபாத் அணியின் வெற்றியை இரு அணிகள் எதிர்நோக்கியுள்ளன. 15 புள்ளிகளுடன், கிட்டத்தட்ட ஒரே ரன்ரேட்டில் இருக்கும் சென்னை மற்றும் லக்னோ அணிகள் தான். இந்த போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றால், இந்த இரு அணிகளும் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்துவிடும்.

பின்னர், கடைசி ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூரு (இன்றைய போட்டியில் தோற்கும் பட்சத்தில்), ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும். இதில், தனது கடைசி ஆட்டத்தில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெறும் அணியே, 14 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடிக்கும். எனவே, இன்றைய ஆட்டம் ஐபிஎல் தொடருக்கே முக்கியமான ஒன்றாகும்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!