ஐபிஎல் மெகா ஏலத்தில் என்ன ஆச்சு.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஏலம்… பதறிப்போன அணி உரிமையாளர்கள்!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
12 February 2022, 2:35 pm

பெங்களூருவில் உள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் 15வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. நாளை வரை நடக்கும் இந்த ஏலம் 5வது மிகப்பெரிய ஏலமாகும். இந்த ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள் இருக்க வேண்டும், அதிகபட்சமாக 25 வீரர்கள். ஒவ்வொரு அணியிலும் 8 அயல்நாட்டு வீரர்களை ஸ்குவாடில் வைத்திருக்கலாம்.

முதல் நாள் ஏலத்தில் இன்றைய 161 வீரர்கள் மட்டுமே ஏலம் விடப்படுவார்கள். மீதமுள்ள வீரர்கள் நாளை முடுக்கி விடப்பட்ட செயல்முறையில் ஏலம் விடப்படுவார்கள். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் வீரராக டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தவான் ஏலத்தில் விடப்பட்டார். ஆரம்ப விலையாக அவருக்கு 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் .ரூ.8.25 கோடிக்கு தவானை பஞ்சாப் ஏலத்தில் எடுத்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக வீரரும், டெல்லி அணியில் கடந்த சீசனில் விளையாடியவருமான அஸ்வின், ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வீரராக ஏலம் விடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ஏலத்தில் விடப்பட்டார். அப்போது, அவரை எடுக்க பல அணிகள் போட்டி போட்டன. இதனால், அவரது ஆரம்பவிலையை விட பலமடங்கு உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 10 கோடியை எட்டிய போது, அங்கிருந்த அணி உரிமையாளர்கள் திடீரென அதிர்ச்சியடைந்தனர்.

https://twitter.com/ShivaniNarayan_/status/1492423853301059585

என்ன ஆச்சு, என்று அனைவரும் எழுந்து நின்று பார்த்த போது, வீரர்களை ஏலம் விட்டுக் கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி மேடையில் இருந்து சரிந்து விழுந்தார். இதனால், மெகா ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் உடல்நலம் தேற வேண்டும் என அனைவரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!