ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்றாலே நினைவுக்கு வரும் இரு அணிகள் சென்னை மற்றும் மும்பை அணிதான். ஐபிஎல்லில் மொத்தம் 10 அணிகள் இருந்தாலும், அதிக ரசிகர்களைக் கொண்ட அணி சென்னைதான். இதில், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல, சென்னை அணிக்கு நிகராக இருப்பது மும்பை. இவ்விரு அணிகள் விளையாடும் போட்டிகள், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுவது போன்று இருக்கும்.
ஒவ்வொரு தொடரின் போது இவ்விரு அணிகளின் ரசிகர்களுக்குதான் அதிக மோதல் இருக்கும். இதுவரையில் மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் பட்டங்களை வென்றுள்ளன. சென்னை அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைக் கொண்ட அணியும் மும்பைதான்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை அணிகள் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தாலும், இந்த சீசன் பெரும் சோதனையாகவே அமைந்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு ஒவ்வொரு அணியும் புதிய வீரர்களுடன் விளையாடி வருகின்றன. இந்த ஐபிஎல்லில் புதிதாக அறிமுகமான லக்னோ மற்றும் குஜராத் அணிகள் கூட வெற்றிக் கணக்கை தொடங்கி அபாரமாக ஆடி வருகிறது.
ஆனால், நடப்பு சாம்பியனான சென்னையும், முன்னாள் சாம்பியனான மும்பையும் இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரு வெற்றியையும் கூட பதிவு செய்யாததது இரு அணிகளின் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
சென்னை அணி, கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. இதேபோல, டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.
இவ்விரு அணியின் ரசிகர்கள் எதிரும், புதிருமாக இருந்தாலும், தற்போது, தோல்வியில் ஒருசேர பயணிப்பதை விமர்சித்து பல்வேறு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பறக்க விட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.