பைனலுக்கு போகக் காரணமாக இருந்த ரகசியம் இதுதான்.. ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் சொன்ன தகவல்!!!

Author: Babu Lakshmanan
25 May 2024, 8:43 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஐதராபாத் அணி.

சென்னையில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் ஐதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.

மேலும் படிக்க: ஆம்பளையாக இருந்தால்… அண்ணாமலைக்கு நேருக்கு நேர் சவால் விட்ட சீமான்…!!

176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி, ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதைத் தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட இருக்கிறது.

ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் சிறப்பான தலைமையினால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக புகழப்பட்டு வரும் நிலையில், வெற்றி குறித்து கம்மின்ஸ் ஓபனாக பேசியுள்ளார்.

அதாவது, இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களே முக்கிய பங்காற்றினர். அதிலும்,ஷபாஷ் அகமது சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்கள் வீசி 23 மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றினார். அவரை இம்பேக்ட் வீரராக கொண்டு வரச் சொன்னதே பயிற்சியாளர் விக்டோரி தான், என்று கூறியுள்ளார்

Views: - 292

0

0