ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெறும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக வில்லியம்சன்(61), பின் ஆலன்(32) ரன்கள் குவித்தனர். அயர்லாந்து அணியில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் உட்பட 3 விக்கெட் வீழ்த்தினார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. பால் ஸ்டிர்லிங்(37) மற்றும் பால்பிரின்(30) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே அடித்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்களும், இஷ் சொதி, டிம் சௌதி மற்றும் மிட்சேல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை ப்ரகாசப்படுத்தி இருக்கிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.