2027 வரை நாங்கதான்… ஒரு தடவையா, ரெண்டு தடவையா… 4வது முறை : சாதனை படைத்த டிஸ்னி ஹாட் ஸ்டார்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 10:14 pm

ஐசிசி – இந்திய ஊடக உரிமத்துக்கான ஏலம், சீல் செய்யப்பட்ட ஏல செயல் முறையில் நடைபெற்றது. ஒரு சுற்று மட்டுமே நடைபெற்ற ஏலத்தில் நான்காவது முறையாக ஐசிசி – இந்திய ஊடக உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைபற்றியுள்ளது.

இதன்மூலம், 2024 முதல் 2027 வரை ஐசிசி நடத்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் உட்பட உலகளாவிய நிகழ்வுகளுக்கான இந்திய துணைக் கண்டத்திற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை டிஸ்னி-ஸ்டார் தக்கவைத்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஐசிசி கிரிக்கெட்டின் வீடாக, டிஸ்னி ஸ்டாருடன் தொடர்ந்து பங்குதாரராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் உறுப்பினர்களுக்கு ஒரு சிறந்த முடிவை வழங்கியுள்ளது மற்றும் எங்கள் லட்சிய வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கும்.

டிஸ்னி ஸ்டார் நம் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தில் ஒரு முக்கிய பங்கை வகிப்பார்கள் மற்றும் முன்பை விட அதிகமான ரசிகர்களை இணைத்து ஈடுபடுவார்கள். உலகளவில் விளையாட்டை ஆர்வத்துடன் பின்பற்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கிரிக்கெட் தொடர்ந்து ஈர்க்கிறது.
ஏலதாரர்கள் அனைவருக்கும் ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே அறிக்கையில் கூறினார்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!