அதிரடி காட்டிய கோலி, லோம்ரோர்… பெங்களூரு அணியின் இலக்கை விரட்டி பிடிக்குமா டெல்லி?

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 10:01 pm

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, பெங்களூரு அணியில் முதலில் விராட் கோலி மற்றும் டு பிளெசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி சில பவுண்டரிகள் அடித்தார். இருந்தும், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், விராட் கோலி நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். பிறகு, முகேஷ் குமார் வீசிய பந்தில் கோலி ஆட்டமிழக்க, மஹிபால் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து அரைசதம் விளாசினார். இறுதியில், மஹிபால் மற்றும் அனுஜ் ராவத் களத்தில் இருந்தனர்.

முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களும், மஹிபால் லோமரோர் 54* ரன்களும், டு பிளெசிஸ் 45 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி வீரர்கள், கேப்டன் வார்னர் மற்றும் சால்ட் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினர். இதையடுத்து வார்னர் வேகமாக அதிரடியாக விளையாடின ரன்களை சேர்த்தார்.

தொடர்ந்து தனது பங்குக்கு சால்ட் சிக்ஸர் மழைகளை பொழிந்தார். இதனால் 5 ஓவரில் டெல்லி அணி விக்கெட் இழக்காமல் 60 ரன்கள் எடுத்துள்ளது. 6வது ஓவரின் போது ஹேஷல்வுட் பந்தில் வார்னர் அவுட் ஆனார். இதையடுத்து மிட்சல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். 6 ஓவர் முடிவில் 70 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து டெல்லி அணி ஆடி வருகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!