விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கோலி : 3 ஆண்டுகளுக்கு பின் விளாசிய சதம்… 212 ரன்கள் குவித்து இந்திய அணி அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2022, 9:22 pm
Virat Kohli - Updatenews360
Quick Share

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது துபாய், ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

அதில் டாஸ் வென்ற ஆபிகானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் கேப்டனாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் விராட் கோலி களமிறங்கினர்.தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் பந்துகளை சிக்ஸர்,பவுண்டரிக்கு விரட்டினர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்துவந்த ரிஷாப் பண்ட் களமிறங்கினார்.மறுபுறம் விராட் கோலி அதிரடியாக விளையாடி ரங்கள் குவித்தார்.பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தொடர்ந்து 213ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட உள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1254

    1

    1