கொல்கத்தா அணியை திணற வைத்த லக்னோ பந்துவீச்சாளர்கள் : 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று லக்னோ அணி முதலிடம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2022, 11:11 pm
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
இதில் ராகுல் ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட் ஆக, அவரையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, டி காக்குடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இதில் 50 ரன்கள் எடுத்து டி காக் தனது விக்கெட்டை இழக்க, க்ருனால் பாண்டியா களமிறங்கினார்.
சிறப்பாக ஆடிவந்த தீபக் ஹூடா 41 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, 25 ரன்கள் எடுத்து க்ருனால் பாண்டியா வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஸ்டாலினிஸ் 28 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் 13 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்கள்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியை லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் இந்திரஜித் டக் அவுட் ஆக, அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் 6 ரன்னில் வெளியேற, பிஞ்ச் மட்டும் கொஞ்சம் தாக்குபிடித்தார், ஆனால் அவரும் அவுட் ஆக, ராணா, ரிங்கு அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.
ரஸல் மற்றும் நரேன் மட்டும் கொஞ்சம் நிதானமாக ஆடினர். இருந்தாலும் ரஸல் 45 ரன்னில் வெளியேற, நரேன் 22 ரன்னில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்றத்தை அளித்தனர். 14.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 75 ரன்களில் வெற்றி பெற்ற லக்னோ அணி 16 புள்ளிகளுடன் அசத்தலான ரன்ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
0
0