இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறும் பாகிஸ்தான் அணி : 4 விக்கெட்டுகளை இழந்து திணறல்!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 2:01 pm

அரையிறுதிப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, நியூசிலாந்து அணிகள் வெளியேறியதால், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் கோப்பைகாக மோதுகின்றன.

இந்த நிலையில், கோப்பைக்கான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிலையான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு 4 ஓவர் வரை விக்கெட் போகவில்லை. இதனால் இங்கிலாந்து அணிக்கு சவாலாகவே இருந்த நிலையல், சாம் கரன் வீசிய பந்தில் ரிஸ்வான் அவுட் ஆகினார்.

இதையடுத்து கேப்டன் பாபர் 32 ரன்னில் அவுட் ஆக, ஹாரிஸ் 8 ரன்னில் ரஷித் பந்தில் அவுட் ஆனார், பின்னர் வந்த அகமது டக் அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் 14 ஓவரில் 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!