மில்லரின் கில்லர் ஆட்டம்.. சொதப்பல் பந்துவீச்சால் தோல்வியை தழுவிய சென்னை…கம்பீர வெற்றியுடன் குஜராத் முதலிடம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2022, 11:18 pm

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 29-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – ராபின் உத்தப்பா களமிறங்கினார்கள்.

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய உத்தப்பா, இந்த போட்டியில் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மொயின் அலி 1 ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, ருதுராஜுடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தனர். இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் உயர, 46 ரன்கள் எடுத்து அம்பதி ராயுடு தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து சிவம் துபே களமிறங்க, அதிரடியாக ஆடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளுக்கு 73 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து கேப்டன் ஜடேஜா களமிறங்க, 12 பந்துகளுக்கு 22 ரன்கள் அடித்தார்.
இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 10 ஓவரில் 58 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் வந்த மில்லர் மற்றும் ரஷீத் கான் அதிரடியால் குஜராத் அணி ஸ்கோர் உயர்ந்தது. 20 பந்துகளில் 40 ரன்களை அடித்த பவுலர் ரஷித் கான் பிராவோ பந்தில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஜோசப் டக் அவுட் ஆனார்.

இறுதி ஓவரை மீண்டும் ஜோர்டன் வீச, 2வது பந்தில் சிக்ஸர் விளாசினார் மில்லர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1666

    0

    0