ஓய்வை அறிவிக்கப்போகிறாரா தோனி..? அது என்ன NEW ROLE…! சமூகவலைதளப் பதிவால் ரசிகர்கள் குழப்பம்!!

Author: Babu Lakshmanan
4 March 2024, 9:52 pm

17வது மற்றும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. தோனிக்கு இந்தத் தொடர் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர் வரும் ஐ.பி.எல். தொடரில் புதிய ரோலை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்து இருககிறார். டோனி ஏற்கவிருக்கும் புதிய பொறுப்பு என்னவென்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

அதேவேளையில், ஓய்வை அறிவித்து விட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்த உள்ளாரா…? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

  • Rajkamal Films Fraud Alert வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!