மும்பை WIN… விராட் கோலி IN : சொன்னதை செய்த மும்பை… வாய்ப்பை இழந்த டெல்லி… ஆடாம ஜெயித்த பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி!!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2022, 11:33 pm
ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 69-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள்.
இதில் யாரும் எதிர்பாராதவிதமாக டேவிட் வார்னர் 5 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய மிச்சேல் மார்ஷ் டக் அவுட் ஆனார். அவரைதொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ப்ரித்வி ஷா 24 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய சர்பராஸ் கான் 10 ரன்கள் எடுத்து வெளியேற, சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய சர்துல் தாக்கூர் 4 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக அக்ஸர் பட்டேல் 19 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர்களின் ரோகித் 2 ரன்னில் வெளியேறினார். ஆனால் இஷான் மற்றும் பிரவிஸ் அட்டம் டெல்லி அணியை பதம் பார்த்தது.
ஒரு கட்டத்தில் 37 ரன்னில் பிரவிஸ் அவுட் ஆக, மறுபுறம் இஷானும் 48 ரன்னில் அவுட் ஆக 95 ரன்னில் 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதையடுத்து வந்த திலக் வர்மா மற்றும் டேவிட் பொறுமையாக விளையாடி பின்னர் அதிரடி காட்டினர்.
11 பந்துகளில் 34 ரன் அடித்திருந்த டிம் டேவிட், தாகூர் பந்தில் அவுட் ஆக, 2 ஓவரில் 14 ரன் தேவையிருந்தது. ஆனால் திலக் வர்மாக நார்த்தி பந்தில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் 5 ரன் தேவை என்ற போதில் ரமன்தீப் சிங் பவுண்டரி அடித்து வெற்றியை பதிவு செய்தார். இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது
0
0