அன்று மேத்யூஸ்… இன்று முஷ்திபிகூர் ரஹீம் ; OBS முறையில் ஆட்டமிழந்த 2வது சர்வதேச வீரர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
6 December 2023, 2:21 pm

அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை விட, அதிகம் பேசப்பட்டது. மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்தது தான். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது, களத்திற்கு வருவதற்கு மேத்யூஸ் தாமதப்படுத்தியதாக, வங்கதேச அணி வீரர்களால் அப்பில் செய்யப்பட்டு அவுட் என அறிவிக்கப்பட்டார்.

தன் நிலைப்பற்றி மேத்யூஸ் எவ்வளவோ சொல்லியும் வங்கதேச அணி வீரர்கள் சற்றும் தங்களின் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விமர்சனங்களை எழச் செய்தது. மேலும், இது ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ்மேன் சிப்-புக்கு அழகல்ல என்றும் வங்கதேச கேப்டன் ஷகிப் உல் ஹாசனை விளாசி வந்தனர்.

இந்த நிலையில், வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் மேத்யூஸைப் போல வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த சம்பவம் அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்திபிகூர் ரஹீம் 35 ரன்களை எடுத்து நிதானமாக ஆடி வந்தார். அப்போது, ஜேமிசன் வீசிய பந்தை தடுப்பாட்டம் ஆடிய அவர், பந்து விலகிச் செல்லும் போது கையில் பிடித்துள்ளார். உடனே நியூசிலாந்து வீரர்கள் அவுட் என அப்பில் செய்தனர். இதையடுத்து, பீல்டர்களுக்கு இடையூறு அளித்ததாக (Obstructing the field) நடுவர்களால் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

https://twitter.com/i/status/1732304521584636050

முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் (Obstructing the field செய்ததால் முதல் முறையாக அவுட்டாக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, வங்கதேச வீரர் முஷ்திபிகூர் ரஹீம் ஆட்டமிழந்துள்ளார். இதனிடையே, வங்கதேச அணி வீரர்களை இலங்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 728

    0

    0