கடைசி நேரத்தில் ஷாக் கொடுத்த ஜடேஜா… டென்சன் ஆன ரோகித் சர்மா : இறுதியில் நடந்த டுவிஸ்ட்.!!

Author: Babu Lakshmanan
11 February 2023, 4:04 pm

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள், இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், அந்த அணி முதல் நாளிலேயே 177 ரன்னுக்கு சுருண்டது. லபுஷக்னே (49), ஸ்மித் (37), அலெக்ஸ் கேரி (36), ஹேண்ட்ஸ்கோம் (31) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை குவித்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. முன்கள வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ரோகித் சர்மா (120) நிலைத்து நின்று ஆடி சதம் அடித்து அவுட்டானார்.அதேபோல, மிடில் ஆர்டரில் சொதப்பினாலும், ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, அக்ஷர் படேல் சிறப்பாக ஆடினர்.

ஜடேஜா (70), அக்ஷர் (84) ரன்கள் எடுத்து அணியின் வலுவான ரன்குவிப்புக்கு கைகொடுத்தனர். 3வது நாளில் 400 ரன்களை குவித்து இந்திய அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா அணியில் அறிமுக வீரர் முர்ஃபி 7 விக்கெட்டுக்களை எடுத்தார்.

223 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, 2வது இன்னிங்சும் படுமோசமாக இருந்தது. அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. இதனால், அந்த அணி 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுக்களும், ஜடெஜா, ஷமி தலா 2 விக்கெட்டும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்த போது, 32வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் ஸ்மித்தை போல்டாக்கினார். ஆட்டம் முடிந்துவிட்டது என்று எல்லோரும் கிளம்ப நினைக்கையில், அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், ஸ்மித் மீண்டும் களத்திற்கு வந்து பேட் செய்தார். அதன்பிறகு வீசப்பட்ட அடுத்த ஓவரில் ஆஸ்திரேலியா அணி ஆல்அவுட்டாகி விட்டது.

இருப்பினும், நோ-பால் வீசியதால் ஜடேஜா மீது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோபம் கண்டிப்பாக இருக்கும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 476

    0

    0