‘வருண பகவான் கூட ஹர்திக் பக்கம் தான்’… ; தொடரை வென்றது இந்திய அணி.. மோசமான சாதனையை தொடரும் நியூசிலாந்து..!!

Author: Babu Lakshmanan
22 November 2022, 4:40 pm

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

டி20 உலகக்கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு டி20 பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. ஆனால், மழை காரணமாக முதல் ஆட்டம் ஒருபந்து கூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நடந்த 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவின் (111 ரன்கள்) சதம் மற்றும் தீபக் ஹீடாவின் (4 விக்கெட்) அசத்தலான பந்து வீச்சால் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு ஆல் ரவுண்டர்கள் அதிகளவில் அணியில் இடம்பெறச் செய்வது மற்றும் பேட்ஸ்மேன்களும் பந்துவீசத் தெரிந்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார்.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் இன்று நடைபெற்றது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே சற்று மழை பெய்தது. இதனால், ஆட்டம் சற்று தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலில் விளையாடி நியூசிலாந்து அணி, 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக கான்வே 59 ரன்களும், பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடந்து, விளையாடிய இந்திய அணிக்கு முன்னணி வீரர்களான இஷான் கிஷான் (10), ரிஷப் பண்ட் (11), சூர்யகுமார் யாதவ் (13), ஸ்ரேயாஷ் ஐயர் (0) ஆகியோரின் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஹர்திக் பாண்டியா (30), தீபக் ஹடாவுடன் நின்று அணியின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார்.

இப்படியிருக்கையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஷ் முறைப்படி ஆட்டம் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாகவும், சிராஜ் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. ஏற்கனவே, ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு வீரர்களின் தேர்வு மூலம் அதிர்ஷ்டம் கைகொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படியிருக்கையில், கடைசி டி20 போட்டியில் முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், கடைசி பேட்ஸ்மென் விக்கெட்டுடன் இந்திய ஆடிக் கொண்டிருந்தது.

ஒரு விக்கெட் விழுந்தாலும் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலை இருந்தது. இப்படியிருக்கையில், மழை குறுக்கிட்டு ஆட்டம் சமனில் முடிந்ததால், வருண பகவானும் ஹர்திக் பாண்டியாவின் பக்கம் என்று கருத்துக்களை பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி 8 டி20 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 604

    2

    1