இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இருபெரும் விளையாட்டு பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பாக இருந்தது.
ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட், 287 ஒருநாள் மற்றும் 124 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். நடப்பு டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷோயப் மாலிக்கை எடுக்காதது கூட சர்ச்சையானது.
சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. 6 முறை கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர் சானியா மிர்சா. இந்திய விளையாட்டின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷோயப் மாலிக்கை திருமணம் செய்தது பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியது.
ஷோயப் மாலிக் – சானியா மிர்சா ஜோடிக்கு இஷான் என்ற ஆண் குழந்தை உள்ளது. 2018ம் ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்தது. அண்மையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா – ஷோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது.
“உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண” என்று பதிவிட்டிருந்தார். ஷோயப் மாலிக்கை பிரிந்திருக்கும் சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது. சானியா மிர்சா – ஷோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாகவும், அவர்களது மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஷோயப் மாலிக் பாகிஸ்தானின் பிரபல நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதை சானியா மிர்சா கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனால் தான் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் சோயப் மாலிக் பிரபல பாகிஸ்தான் நடிகை ஆயிஷா உமருடன் நெருக்கமா இருப்பதால் தானாம். சமீபத்தில் இது குறித்து பேட்டி அளித்த ஆயிஷா உமர், “நான் திருமணமானவர்களுடன் இருக்க மாட்டேன். பக்கத்து நாடு தான் என் மீது வதந்திகளை கிளப்பியது. அதன் பிறகு தான் என்னுடைய நாடும் தவறான செய்தியை பரப்பியது,” என்று கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.