வெறியாட்டம் ஆடிய பஞ்சாப்… மீண்டும் சொதப்பிய ரோகித் ஷர்மா.. வெற்றிக்காக போராடும் மும்பை..!!
Author: Babu Lakshmanan3 May 2023, 10:04 pm
மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி மளமளவென ரன்களை குவித்தது.
மொகாலியில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப்புக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ப்ரப்சிம்ரன் 9 ரன்னிலும், தவான் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், முதல் 10 ஓவர்களில் மும்பை அணியின் கையே ஓங்கியிருந்தது.
இதைத்தொடர்ந்து, ஷார்ட்ஸ் (27) ஓரளவுக்கு சப்போர்ட் கொடுத்த நிலையில், இறுதியில் லிவிங்ஸ்டோன் (82 நாட்அவுட்), ஜிதேஷ் சர்மா (49 நாட் அவுட்) ஆகியோர் மும்பை அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டினர். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்தது.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோகித் ஷர்மா இந்த முறையும் ஏமாற்றம் கொடுத்தார். ஆட்டத்தின் 3வது பந்தில் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர், இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்த க்ரீன் ரன் குவிக்க ஆரம்பித்தார். ஆனால், பவர் பிளேவின் கடைசி பந்தில் க்ரீன் (23) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
மும்பை அணிக்கு இன்னும் பேட்டிங் லைன் அப் இருப்பதால், அந்த அணி வெற்றிக்காக போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.