2023ஆம் ஆண்டின் சிறந்த வீரர்… ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் சாதித்த இந்திய வீரர் விராட் கோலி!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 4:56 pm

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் குவித்தார். இதில் 6 சதம், 8 அரை சதம் அடங்கும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவர் பெற்றுக் கொண்டார். விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!