ஆஸி.யுடனான ஒரு நாள் போட்டியில் விலகிய வீரர்கள்… சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு? விளாசும் நெட்டிசன்கள்!!!
Author: Udayachandran RadhaKrishnan14 March 2023, 9:51 pm
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போட்டிகள் வரும் மார்ச் 17ம் தேதி மும்பையில் தொடங்கி, கடைசிப் போட்டி மார்ச் 22ம் தேதி சென்னையில் நிறைவு பெற உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி நடக்க உள்ளதால், ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
4வது டெஸ்ட் போட்டியில் பங்குபெற்ற அவர், முதுகுவலி பிரச்சினை என பயிற்சியாளர்களிடம் கூறியுள்ளார். அவருக்கு ஸ்கேன் எடுத்த போது, பழைய காயமே இன்னும் முழுவதுமாக குணமடையாமல் இருப்பது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் கேப்டன் ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் மிக முக்கிய இரு வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கான மாற்று வீரர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
மாற்று வீரராக சஞ்சு சாம்சனே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி விளையாடிய போது, அவரும் ஸ்ரேயாஸ் ஐயரும் மட்டுமே பிரதான வீரர்களாக விளையாடி வந்தனர்.
அதுமட்டுமல்லாமல் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என அனைத்து நிலைகளிலும் சஞ்சு சாம்சனால் ஆட முடியும் என்று ஏற்கனவே நிரூபித்துள்ளார்.
அதேபோல் சஞ்சு சாம்சனின் ஒருநாள் போட்டிக்கான சராசரியாக 71 வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய எந்த வீரருக்கும் 66 சராசரியை வைத்ததில்லை.
ஆனால் அசாத்தியமான சராசரியை வைத்துள்ள சஞ்சு சாம்சன், அடுத்தடுத்து மூன்று ஒருநாள் தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மாற்று வீரர்களுக்கான தேவை இருக்கும் போது கூட, சஞ்சு சாம்சனை பிசிசிஐ தேர்வு செய்ய முன் வரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன