கோப்பையை கொடுத்த பிறகு ஆஸி., கேப்டனுடன் கைகுலுக்க மறுத்தாரா பிரதமர் மோடி..? வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
20 November 2023, 8:46 am

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு கில் (4) ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார். அவர் இந்தப் போட்டியிலும் அரைசதம் (47)அடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஸ்ரேயாஷ் ஐயர் (4) ஏமாற்றம் அளித்த்ர். இதனால், இந்திய அணி 81 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி – கேஎல் ராகுல் ஜோடி விக்கெட் விழாமல் நிதானமாக ஆடினர்.

ஒரு கட்டத்தில் கோலி (56), கேஎல் ராகுல் (66) அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், நடப்பு உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக இந்திய அணி ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (7), மார்ஷ் (15), ஸ்மித் (4) ஆகியோரின் விக்கெட்டுக்களை 50 ரன்னுக்குள் இந்திய அணி கைப்பற்றியது. இதனால், இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், டிராவிஸ் ஹெட் (137), லபுஷக்னே (58 நாட் அவுட்) ஆகியோர் சிறப்பாக ஆடி, 43 ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இதன்மூலம், 6வது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. போட்டி முடிந்த பிறகு, உலகக்கோப்பையை பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸிடம் கொடுத்தார். அப்போது, பிரதமர் மோடி கம்மின்ஸிடம் கை குலுக்க மறுத்தது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பகிர்ந்து வரும் எதிர்கட்சியினர், கோப்பையை வென்ற அணியிடம் எப்படி நடந்து கொள்வது என்ற அடிப்படை கூட தெரியாதா..? என்று விமர்சித்து வருகின்றனர்.

அதேவேளையில், அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உண்மையான வீடியோவை பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் கோப்பையை கொடுத்த பிறகு, கம்மின்ஸிடம் பிரதமர் மோடி கைகுலுக்கிய பிறகே, அங்கிருந்து நகர்ந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 776

    0

    0