பயம் காட்டிய பவல்…2 நிமிடம் போட்டியை நிறுத்த வைத்த சர்ச்சைக்குரிய பந்து : டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தில் ராஜஸ்தான்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 11:42 pm

ஐபிஎல் தொடரில் 34-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள்.

இவர்களின் கூட்டணி அதிரடியான தொடக்கத்தை கொடுக்க, பட்லர் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த படிக்கல் அரைசதம் எடுத்து 54 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த பட்லர் 116 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் எடுத்தது.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி துவக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் வார்னர் அதிரடியாக விளையாடினர். ஆனால் வார்னர் 14 பந்துகளில் 28 ரன் எடுத்த போது அவுட் ஆனார்.

பின்னர் பிரித்திவ் ஷாவும் 37 ரன்னில் வெளியேற, சர்பராஸ் கான் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் நிதானமாக விளையாடி 24 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

அவருக்கு கைகொடுத்த யாதல் 37 ரன்னில் வெளியேற, அக்ஷர் படேல், தாகூர் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். 19வது ஓவரை வீசிய பர்ஷித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டு ரன் ஏதும் கொடுக்காமல் மேடின் செய்தார்.

6 பந்துகளுக்கு 36 ரன் தேவைப்பட்ட போது, களத்தில் இருந்த போவெல் முதல் மூன்று பந்துகளை சிக்சருக்கு விளாசி ராஜஸ்தான் அணியை திக்குமுக்காட வைத்தார். ஆனால் அந்த பந்து நோ பால் என டெல்லி அணி வீரர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அம்பயர் மறுப்பு தெரிவித்தார்.

இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!