பவலின் பவர் ஆட்டம்…கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி : 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2022, 11:29 pm
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில், நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, 30வது பந்தில் அரைசதத்தை கடந்து, 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ரிங்கு சிங் 23 ரன்கள் எடுத்தார். டெல்லி வீரர் குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி துவக்க வீரர் டக் அவுட் ஆனார்.
வார்னர் வழக்கமாக அதிரடியை காட்டினார். ஒரு பக்கம் மார்ஷ் 13 ரன்னில் வெளியேற, லலித் யாதவ் 22 ரன்களை எடுத்து அவுட் ஆனார். கேப்டன் பண்ட் 2 ரன்னில் வெளியேற, பவல் அதிரடி காட்டினார். ஒரு பக்கம் வார்னரும் அவுட் ஆக, விக்கெட்டுகள் சரிந்து திணறிய போது, அக்ஷர் படேல் அதிரடியாக விளையாடினார்.
ஆனால் நிலைத்து நிற்கவில்லை, இருந்தாலும் பவல் நிலைத்து ஆடி வெற்றிக்கனியை பறித்தார். 19 ஓவரில் டெல்லி அணி 150 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியது.
0
0