ரஸல் சூறாவளியில் சிக்கி பஞ்சாப் தோல்வி : ஒரே போட்டியில் கொல்கத்தா அணிக்கு மூன்று மகுடம்!!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2022, 11:10 pm
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவர்களில், 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 16 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்சே 9 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 31 ரன்கள் விளாசினார். ரபாடா 16 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன்கள் சேர்த்தார்.
கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். டிம் சவுத்தி 2 விக்கெட், சிவம் மவி, சுனில் நரைன், ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி துவக்க வீரர்கள், ரஹானே, வெங்கடேஸ் ஐயர் சொற்ப ரன்னில் வெளியேறினர். கேப்டனர் ஸ்ரேயாஷ் 26 ரன்னில் பெவிலியின் திரும்ப, ராணா வந்த வேகத்தில் டக் அவுட்டாகி கிளம்பினார்.
ஒரு பக்கம் பில்லிங்கஸ் நிதானமாக ஆட மறுமுனையில் ரஸல் அதிரடியாக விளையாடினார். இக்கட்டான சூழலில் இருந்த கொல்கத்தா அணியை மீட்ட ரஸல் 31 பந்துகளில் 70 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். முடிவில் 14.3 ஓவரில் 141 ரன்கள் எடுத் கொல்கத்தா அதிரடி வெற்றி பெற்றது.
கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ் இந்த போட்டியில் 3 விக்கெட் எடுக்க, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்து பர்ப்பில் கேப் தன்வசப்படுத்தினார். இதே போல ரஸல் ஆரஞ்சு கேப்பை தன்வசப்படுத்தினார். இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி முதலிடத்தில் உள்ளது.