சுட்டிக் குழந்தையின் அதிரடி… பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்ட பஞ்சாப் அணி : சீறிப் பாயுமா மும்பை அணி?!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 10:00 pm

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் 11 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் லிவிங்ஸ்டோன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். அதர்வா டெய்ட் 29 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் கர்ரன் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 பந்தில் 92 ரன்களை குவித்தது. பாட்டியா 41 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 29 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 7 பந்தில் 4 சிக்சர் உள்பட 25 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி சார்பில் பியூஷ் சாவ்லா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.

அடுத்தாக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ரோகித் சர்மா, இஷான் பொறுமையாக ஆடினர்,. ஆனால் இஷான் 1 ரன் எடுத்த போது ஹர்ஸ்தீப் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ரோகித்துடன் க்ரீன் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை ரோகித் ஜோடி பறக்கவிட்டனர். 5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 46ரன்களுடன் மும்பை அணி ஆடி வருகிறது.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!