பவுலிங்கில் அசத்திய பஞ்சாப் அசத்தல் வெற்றி : போராடி தோல்வியடைந்த சென்னை.. பறிபோனதா ப்ளே ஆஃப் வாய்ப்பு?!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2022, 11:33 pm

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் – மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள்.

முதல் 5 ஓவர்கள் வரை இந்த கூட்டணி பொறுமையாக ஆடிவந்த நிலையில், 18 ரன்கள் அடித்து மயங்க் அகர்வாக் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து ராஜபக்க்ஷே களமிறங்க, தவானுடன் இணைத்து அதிரடியாக ஆடிவந்தார். இவர்களின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயர்ந்தது.

42 ரன்கள் அடித்து ராஜபக்க்ஷே வெளியேறினார். அவரைதொடர்ந்து ஜானி லிவிங்ஸ்டன் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 17 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர் உத்தப்பா 1 ரன்னில் வெளியேற, கெய்க்வாட் பொறுமையாக விளையாடினார்,

ஆனால் சாண்ட்னர், ஷிவம் துபே அடுத்தடுத்து ஒற்றை இலக்கு எண்களில் அவுட் ஆகினர். பின்னர் வந்த ராயுடு அதிரடியாக விளையாடினார். ஆனால் கெய்க்வாட் 30 ரன்னில் வெளியேற, ஜடேஜா – ராயுடு ஜோடி அதிரடியாக ஆடினர்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி சுலபமாக வெற்றியடைந்து விடும் என்று இருந்த போது ராயுடு 39 பந்துகளில் 78 ரன் எடுத்திருந்த போது அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து கேப்டன் தோனி களமிறங்கினார். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், 8 பந்துகளில் 12 ரன்னுடன் தோனி வெளியேறினார். முடிவில் 176 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது,.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 1670

    0

    0