‘நீங்க நல்ல பவுலர் மட்டுமல்ல.. சூப்பர் Entertainer-தான்’ ; மைதானத்தை கலகலக்கச் செய்த ரபாடா!! வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
27 December 2022, 5:08 pm

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தென்னாப்ரிக்க வீரர் ரபடா செய்த செயல் மைதானத்தில் இருந்த ரசிகர்களை கலகலக்கச் செய்தது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று மெல்போர்னில் தொடங்கியது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, வார்னரின் இரட்டை சதத்தால் 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் சேர்த்துள்ளது.

2வது நாள் ஆட்டத்தின் போது, தென்னாப்ரிக்க வீரர் காகிசோ ரபாடா, பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் செய்யும் சில சைகைகளை அவருக்கு பின்னால் கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்களும் செய்து ரவுசு காட்டினர்.

இதனை கண்டு நெகிழ்ந்த ரபாடா, தனது செயலை நிறுத்தாமல், அடுத்தடுத்து புதுபுது சைகைகளை காட்டினார். அவரை பின்தொடர்ந்து மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அதனை செய்தது அனைவரையும் கலகலக்கச் செய்தது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், நீங்கள் சிறந்த பவுலர் மட்டுமல்லாது, சூப்பர் என்டர்டெய்னர் என்று குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு முன்பாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெர்ஃபி ஹியூக்ஸ், முன்னாள் இங்கிலாந்து வீரர் ரோனி இரானி ஆகியோர் இதுபோன்று செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 471

    0

    0