COME BACK கொடுத்து புதிய சாதனை படைத்த ரஹானே… அதிர்ச்சியில் மும்பை : மிரள வைத்த சென்னை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 10:02 pm

மும்பையில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 38 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார்.

இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார். கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது. சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களின் கான்வே டக் அவுட் ஆனார். இதையடுத்து ருதுராஜூடன் ரஹானே கைக்கொடுத்தார்.

இந்த ஜோடி அருமையான ஆட்டத்தை ஆடியது. குறிப்பாக ரஹானே, அதிரடியாக ரன்களை குவித்ததார். 19 பந்துகளில் அரைசதம் கடந்து புதிய சாதனையை படைத்தார்.

சிஎஸ் கே அணியில் இதுவரை 16 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நிகழ்த்தியவர் சின்னத்தல என அழைக்கப்படும் ரெய்னா.

2023 நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ரஹானே. 6 ஓவர் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?