பேட்டிங், பவுலிங்கில் வெளுத்துக்கட்டிய ராஜஸ்தான் அணி : லக்னோ அணியை துவம்சம் செய்து 2ஆம் இடத்துக்கு முன்னேறி அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2022, 11:35 pm

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் முதல் போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினார்கள். இதில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பட்லர் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 32 ரன்கள் அடித்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, ஜெய்ஸ்வால், 41 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய படிக்கல் 39 ரன்களுக்கும், ரியான் பராக் 19 ரன்கள் எடுத்து தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்த நிலையில், முதலில் களமிறங்கிய டிகாக் 7 ரன்னிலும், கேப்டன் ராகுல் 10 ரன்னிலும், பதோனி டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர் வந்த தீபக் ஹூடா நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு ஜோடியாக களமிறங்கிய க்ருணல் பாண்டியா 2 ரன் எடுத்திருந்த போது அஸ்வின் பந்தில் அவுட் ஆனார்.

ஒரு பக்கம் தீபக் அரை சதம் அடிக்க, மறுமுனையில் ஸ்டொய்னிஸ் அதிரடியாக ஆடினார். ஆனால் தீபக் 3 ரன்னில் அவுட் ஆக, மறுமுனையில் வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.

20வது ஓவரில் 5 பந்துகளுக்கு 28 ரன்கள் தேவை என்ற போது, ஸ்டொய்னிஸ் 27 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். முடிவில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ அணி தோல்வியடைந்தது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ