ராஜஸ்தான் அணியின் ராஜாங்கம்…பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் : சாஹல் சுழலில் சிக்கிய கொல்கத்தா போராடி தோல்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 11:42 pm

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பையில் பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே ஜோஸ் பட்லர் சிறப்பாக அடிவர, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த படிக்கல், 24 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், பட்லருடன் இணைந்து சிறப்பாக ஆடிவந்தார். 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த ஜோஸ் பட்லர், சதம் விளாசி, 103 ரன்கள் எடுத்து தந்து விக்கெட்டை இழந்தார். பின்னர் சிம்ரன் ஹெட்மயர் களமிறங்க, இவரின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கொர் 200-ஐ கடந்தது.

இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொலகத்தா அணியின் துவக்க வீரர் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்,

ஆனால் சுனில் நரேன் டக் அவுட் ஆனார், பின்னர் வந்த கேப்டன் ஸ்ரோயாஷ் அதிரடியாக ஆடினார். ஒரு பக்கம் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 58 ரன் எடுத்த பிஞ்ச் 58 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த ராணா 18 ரன்னில் வெளியேற, சாஹலில் சுழலில் அடுத்தடுதத்து வீரர்கள் அவுட் ஆகினர். ஸ்ரேயாஷ் 85 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பந்தில் அவுட் ஆனார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஹாட் ட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த சாஹல்.

8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்னில் தத்தளித்த கொல்கத்தா அணியை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வந்தார் உமேஷ். வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசினார். ஆனால் மறுபுறம் ஜாக்சன் அவுட் ஆனார்.

இறுதியி 4 பந்துகளுக்கு 9 ரன் தேவையென்ற போது ஒரு ரன் வருண் எடுக்க, உமேஷ் யாதவ் அவுட் ஆனதால் ராஜஸ்தான் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்