ஆடிய ஆட்டம் என்ன…? RCB செய்த மெகா தவறு… 17 ஆண்டு கனவு தகர்ந்தது… கிண்டலடிக்கும் CSK ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 9:45 am

நடப்பு ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று போட்டியில் பெங்களூரூ – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரூ அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தத் தோல்விக்கு காரணம் பெங்களூரூ அணியின் வீரர்கள் நடந்து கொண்ட விதம்தான் என்று கூறப்படுகிறது. முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வியை தழுவிய பெங்களூரூ அணி, கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, பிளே ஆஃப்பிற்கு முன்னேறியது.

மேலும் படிக்க: கோவையில் ஓடும் அரசுப் பேருந்துக்குள் கொட்டிய மழை.. புலம்பியபடி குடையுடன் பயணம் செய்த பயணிகள்…!!

சென்னைக்கு எதிரான வாழ்வா…? சாவா..? ஆட்டத்தில் பெங்களுரூ அணி த்ரில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு வெற்றிக்களிப்பில் இருந்த ஆர்சிபி வீரர்கள், சென்னை வீரர்களை கைகுலுக்கக் கூட மறந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்தனர்.

அடுத்த சில நாட்களிலேயே எலிமினேட்டர் போட்டி இருந்த நிலையில், அதற்கான தயார் மனநிலையில் ஆர்சிபி வீரர்கள் இல்லை என்பதையே இந்த போட்டியின் முடிவு காண்பிப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதையே ஒரு ஐபிஎல் கோப்பை வென்றதாக நினைத்துக் கொண்டாடிய ஆர்சிபி பணி நாக் – அவுட் போட்டியின் தீவிரத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே இந்த தோல்வி காட்டுகிறது.

அதேவேளையில், வெற்றி பெறுவதற்கு முன்பாக ஓவராக ஆடக்கூடாது என்று ஆர்சிபி ரசிகர்களை சென்னை அணியின் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 710

    1

    0