மோசமான கார் விபத்து.. ரிஷப் பண்ட் உயிருக்குப் போராடிய போது பணம் கொள்ளையா..? போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மை..!!
Author: Babu Lakshmanan30 December 2022, 6:51 pm
கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிக்கிய போது, அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டெல்லியில் இருந்து தனது சொகுசு காரின் மூலம் உத்தரகாண்ட்டில் உள்ள ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும், தாயாருக்கு சர்ப்பைரஸ் கொடுக்கும் நோக்கில், காரை பண்ட்டே ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் திடீரென்று கட்டுப்பாட்டை கார் இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதி சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட்டின் தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார்.
காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ரிஷப் பண்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களால் ரிஷப் பண்ட் காரில் கொள்ளையடிக்கபட்டதாக சில வதந்திகள் வெளியாகின.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விபத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில், சாலையில் கிடந்த அனைத்து பணத்தையும் எடுத்து இந்திய கிரிக்கெட் வீரரிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைத்ததாகக் கூறினார். மேலும் “அவரது பணம் சாலையில் சிதறியது நாங்கள் அதை எடுத்து அவரது கைகளில் கொடுத்தோம்” என்று என பேருந்து ஓட்டுநர் ஒருவரும் தெரிவித்தார்.