பெங்களூரூ அணிக்கு புதிய கேப்டன் நியமனம்… இனி அந்த அணிக்கு அடித்தது யோகம்தான்…!!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 5:30 pm

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பெங்களூரூ அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

முன்னதாக, ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற்றது. இதில், முக்கிய வீரர்கள் அணிகள் மாறினர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளது.

இதுவரை ஒருமுறை கோப்பையை வெல்லாத பெங்களூரூ அணி, விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகியோரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு, எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விட்டது. பின்னர், ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு நடுவே எடுத்துக் கொண்டது.

அந்த வகையில், தினேஷ் கார்த்திக், சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த டூபிளசிஸ், டேவிட் வில்லி, ரூதர்ஃபோர்டு உள்ளிட்ட முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

மேலும், விராட் கோலி கடந்த சீசனோடு கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. குறிப்பாக, டூபிளசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரேனும் நியமிக்கப்படுவார்கள் என்ற பேச்சும் அடிபட்டது.

IPL 2022 Auction: Royal Challengers Bangalore buys Faf du Plessis for ₹7  crores

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் புதிய கேப்டனாக டூபிளசிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பெங்களூரூ ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த டூபிளசிஸ், தற்போது பெங்களூரூ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த முறை கோப்பையை வென்று விடலாம் என்ற நம்பிக்கை அந்த அணியின் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!