ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பெங்களூரூ அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
முன்னதாக, ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற்றது. இதில், முக்கிய வீரர்கள் அணிகள் மாறினர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளது.
இதுவரை ஒருமுறை கோப்பையை வெல்லாத பெங்களூரூ அணி, விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகியோரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு, எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விட்டது. பின்னர், ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு நடுவே எடுத்துக் கொண்டது.
அந்த வகையில், தினேஷ் கார்த்திக், சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த டூபிளசிஸ், டேவிட் வில்லி, ரூதர்ஃபோர்டு உள்ளிட்ட முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
மேலும், விராட் கோலி கடந்த சீசனோடு கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. குறிப்பாக, டூபிளசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரேனும் நியமிக்கப்படுவார்கள் என்ற பேச்சும் அடிபட்டது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் புதிய கேப்டனாக டூபிளசிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பெங்களூரூ ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த டூபிளசிஸ், தற்போது பெங்களூரூ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த முறை கோப்பையை வென்று விடலாம் என்ற நம்பிக்கை அந்த அணியின் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.