கில்லுக்கு ஹார்ட்டின் விட்டது நானா..? பல சர்ச்சைகளுக்கு பிறகு மவுனம் கலைத்த டெண்டுல்கரின் மகள் சாரா…!!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 6:52 pm

தனது X தள கணக்கு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அர்ஜுன் என்ற மகனும், சாரா என்னும் மகளும் உள்ளனர். தந்தையைப் போலவே அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இதனிடையே, சச்சினின் மகள் சாராவும், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லும் காதலிப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன.

https://twitter.com/SaraTendulkarX/status/1724722532526555259

இதனிடையே, X தளப்பதிவில் சாரா டெண்டுல்கர் என்ற அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து, அவரது புகைப்படங்களும், கில்லை காதலிப்பது போன்ற பதிவுகளும் நாள்தோறும் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், X சமூக வலைதளத்தில் தனக்கு எந்தக் கணக்கும் இல்லை என சாரா டெண்டுல்கர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: சமூக வலைதளங்கள் நாம் நமது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கான அற்புதமான தளம். இருந்தாலும் சிலர் உண்மைக்கு புறம்பாக அதனை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இதில் நான் எனது டீப்ஃபேக் படங்களை பார்த்துள்ளேன்.

எக்ஸ் தளத்தில் எனது பெயரில் போலியாக சில கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் எனக்கு தனியாக கணக்கு எதுவும் இல்லை. இந்த போலி கணக்கு மீது X தளம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன், சாரா தெரிவித்துள்ளார்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!