விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… பாக்., நடிகையை மணந்தார் சோயிப் மாலிக் ; அதிர்ச்சியில் சானியா மிர்ஸா..!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 1:38 pm

ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2003ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வந்தார். இந்தியாவில் ஆண்கள் மட்டுமே டென்னிஸில் பங்கேற்று வந்த நிலையில், பெண்களாலும் முடியும் என்பதை உணர்த்தும் விதமாக, டென்னிஸ் பல்வேறு சாதனைகளை படைத்தார்.

2009 ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவு, 2012 பிரெஞ்சு ஓபன், 2014 அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றார். அதேபோல, 2015ல் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு, 2015 அமெரிக்க ஓபன், 2016 ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றினார்.

கடந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், இவர்களின் திருமணம் பெரும் விவாதப் பொருளாக இருந்தது. பாகிஸ்தான் வீரரை கரம் பிடித்திருந்தாலும், அவர் இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இருவருக்கும் இசான் மிர்சா மாலிக் என்னும் மகன் உள்ள நிலையில், சானியா மற்றும சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வந்த நிலையிலும், இருதரப்பினரும் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. ஆனால், தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சானியா மிர்சா.

அண்மையில் இவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி விவகாரத்து தொடர்பான கேள்விகளை மீண்டும் வலுக்கச் செய்தது. அதோடு, மேலும், இன்ஸ்டாகிராமில் சோயிப் மாலிக்குடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களையும் சானியா மிர்சா நீக்கிவிட்டதாக சொல்லப்பட்டது. இதன்மூலம், கணவரை சானியா மிர்சா விவகாரத்து செய்யப்போகிறாரா..? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை சோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் அவர்களின் திருமணப் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், சானியா மிர்சாவை சோயிப் மாலிக் பிரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!