பரபரப்பான 3 பந்துகள்… கடைசி நிமிடத்தில் ஷாக் கொடுத்த ரஷித் கான் : இலங்கையிடம் போராடி ஆப்கானிஸ்தான் தோல்வி!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2023, 9:18 am

பரபரப்பான 3 பந்துகள்… கடைசி நிமிடத்தில் ஷாக் கொடுத்த ரஷித் கான் : இலங்கையிடம் போராடி ஆப்கானிஸ்தான் தோல்வி!

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 6வது போட்டியில் குரூப் பி-யில் உள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியானது இலங்கையில் உள்ள லாகூர் மைதானத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்திருந்தது.

அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 92 ரன்கள் எடுத்திருந்தார். பதும் நிஸ்ஸங்க 41 ரன்களும், திமுத் கருணாரத்ன 32 ரன்களும், அசலங்கா 36 ரன்களும், துனித் வெல்லலகே 33 ரன்களும், மஹீஷ் தீக்ஷன 28 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குல்பாடின் நைப், 4 விக்கெட்களை வீழ்த்தினார். ரஷீத் காண விக்கெட்டுகளையும், முஜீப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதில் 50 ஓவரின் 292 எண்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறி, அடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மத்துல்லா மற்றும் இப்ராஹிம் ஆகியோர் 4 மற்றும் 7 ரன்கள் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து ஆடிய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே வந்தன.

குல்பாடின் நைப் 22 ரன்களும், ரஹ்மத் ஷா 45 ரன்களும், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 59 ரன்களும், நஜிபுல்லாஹ் சத்ரான் 23 ரன்களும், முகமது நபி 65 ரன்களும், கரீம் ஜனத் 22 ரன்களும், ரஷித் கான் 27 ரன்களும் எடுத்து இருந்தனர். 37 ஓவர் முடிந்த நிலையில் வெற்றிக்கு மிக அருகில் இருந்த சமயத்தில் ரஷீத் கான் ரன் அவுட் ஆக, சில்வா வீசிய பந்தில் அடுத்து வந்த முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக, இறுதியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி 289 ரன்கள் எடுத்து இருந்தது. இலங்கை அணி சார்பாக கசுன் ராஜித 4 விக்கெட்களையும், சில்வா மற்றும் துனித் வெல்லலகே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 399

    0

    0