புதிய மைல்கல்லை எட்டிய சுப்மன் கில்… சச்சின் சாதனை முறியடிப்பு : ஜஸ்ட் மிஸ்ஸான கேப்டனின் சாதனை… நியூசி., ஆட்டத்தில் சுவாரஸ்யம்!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 5:43 pm

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் ஓரளவுக்கு இருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் சரிந்தன. ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம், மிக இளவயதில் (23) இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக இஷாந்த் கிஷாந்த் 24 வயதிலும், ரோகித் சர்மா 26 வயதிலும் இந்த சாதனையை படைத்தனர்.

அதுமட்டுமில்லாமல், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அடித்த அதிகபட்ச ஸ்கோரை (186 நாட்அவுட்) முறியடித்து, சுப்மன் கில் அசத்தியுள்ளார். மேலும், ஐதராபாத் மைதானத்தில் தனிமனித அதிகபட்ச ஸ்கோராக 186 ரன்களை சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார். அதனை தற்போது கில் முறியடித்துள்ளார்.

இறுதியில் கில் 208 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!