ரிங்கு அடித்த சங்கு… கடைசி ஓவரில் சிக்ஸர் மழை : குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கொல்கத்தா!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 7:25 pm

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் வேளையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா(17 ரன்கள்) மற்றும் கில்(39 ரன்கள்) நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். சுனில் நரைன் வீசிய பந்தை, சாஹா அடித்த போது ஜெகதீசன் அந்த கேட்ச் வாய்ப்பை அருமையாக எடுத்தார்.

அதன் பின் இறங்கிய இளம்வீரர் சாய் சுதர்சன்(53 ரன்கள்) அதிரடி காட்டினார். தொடர்ந்து விளையாடிய சுதர்சன் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார், அதனைதொடர்ந்து இறங்கிய விஜய் சங்கர்(63* ரன்கள்) பவுண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசி, குஜராத் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். கொல்கத்தா அணிக்கு வெற்றி பெற 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள், குர்பாஷ் 15 ரன்னில் அவுட் ஆக, ஜெகதீசன் 6 ரன்னில் பெவிலியின் திரும்பினார். பின்னர் வந்த வெங்கடேஷ் மற்றும் கேப்டன் ராணா ஆகியோர் நேர்த்தியான ஆட்டத்தை ஆடினர்.

இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். ஆனால் ராணா 45 ரன்னில் அவுட்ட ஆக,, மறுமுனையில் இருந்த வெங்கடேஷ் 83 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த ரஸல் 1 ரன்னுடனும், நரைன் டக் அவுட் ஆகினர். ரிங்குவுடன் ஜோடி சேர்ந்த உமேஷ் யாதவ், நிதானமான ஆட்டத்தை அளித்தனர். 19 ஒவரின் போது ரிங்கு சிக்ஸர் மழை பொழிந்து குஜராத்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

கடைசி ஓவரில் 29 ரன் தேவை என்ற போது, ரிங்கு தொடர்ந்து 3 சிக்ஸர் அடித்து விளசினார். ரிங்கு கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தார்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!