விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்… கைகோர்த்த கோலி – ஸ்ரேயாஷ் ஐயர்… மெல்ல மெல்ல தலைதூக்கும் இந்திய அணி..!!

Author: Babu Lakshmanan
26 December 2023, 4:31 pm

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணி தென்னாப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் திணறினர். கேப்டன் ரோகித் ஷர்மா 5 ரன்னில் ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, பர்கரின் பந்துவீச்சில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் (17), கில் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது. பின்னர், நட்சத்திர வீரர் கோலியுடன் ஸ்ரேயாஷ் ஐயர் ஜோடி சேர்ந்தார். ஸ்ரேயாஷ் ஐயருக்கு யான்சென்னும், கோலிக்கு ஷோர்ஷியும் அடுத்தடுத்து கேட்ச் வாய்ப்பை தவற விட்டனர்.

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவித்து வருகின்றனர். மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் சேர்த்துள்ளது. கோலி 33 ரன்னிலும், ஸ்ரேயாஷ் ஐயர் 31 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!