பாகிஸ்தானை தோற்கடித்து விட்டு ‘ஜெய் ஸ்ரீ ஹனுமான்’… பேட்டில் இந்து மத அடையாளம் ; தென்னாப்ரிக்கா வீரரால் வெடித்த சர்ச்சை..!!!

Author: Babu Lakshmanan
28 October 2023, 9:48 am

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்களை நோக்கி இந்திய ரசிகர்கள் சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். இந்த விவகாரம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தை ஆளும் திமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்தனர். அதோடு, சாரி பாகிஸ்தான் என் ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்தனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் புகார் அளித்தது. இது தொடர்பான சர்ச்சை அடங்குவதற்குள், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின், தனது இன்ஸ்டாகிராமில் ‘ஜெய் ஸ்ரீ ஹனுமான்’ என தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகாராஜ் பதிவிட்டுள்ளார்.

கடைசி விக்கெட்டுக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பொறுமையாக ஆடி தென்னாப்ரிக்கா அணியை, கேஷவ் மகாராஜ் வெற்றி பெறச் செய்தார்.

அதன்பின்பு, வெற்றி பெற்ற மகிழ்ச்சியை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்த அவர், ஷாம்ஷி, மார்க்ரம் சிறப்பாக ஆடியதாக குறிப்பிட்டதுடன், ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்தப் போட்டியில் அவர் பயன்படுத்திய பேட்டில், இந்து மதத்தை குறிக்கும் குறியீடு இருந்ததும் பெரும் சர்ச்சையையும், விமர்னங்களையும் எழச் செய்துள்ளது. மத அடையாளங்களை விளையாட்டில் பயன்படுத்துவதை ஐசிசி எப்படி அனுமதித்தது என்று கேள்வியை ஒரு தரப்பினர் எழுப்பி வருகின்றனர். அதேவேளையில், பாகிஸ்தான் வீரர்கள் சதம் விளாசினாலோ, அதிக விக்கெட்டுக்களை எடுத்தாலோ, மண்டியிட்டு மைதானத்தில் தொழுவது மட்டும் சரியா..? என்று கேஷவ் மகாராஜுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

எது எப்படியோ, மதம், சாதி கலவரங்கள் கிரிக்கெட்டால் கட்டுக்குள் வந்தது என்ற வரலாறு இருக்கும் போது, கிரிக்கெட் போட்டியை மதம் பிளவுபடுத்தி விடக் கூடாது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!