இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது .
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரரான டி காக் சதம் அடித்து அசத்தினார். 130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அந்த அணியின் வான்டெர் துஸ்சென் 52 ரன்களும், டேவிட் மில்லர் 39 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்கள் முடிவில் 287 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து, 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் கேஎல் ராகுல் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை தந்தார். இதன்பின், ஷிகர் தவான், விராட் கோலி ஜோடி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் தங்களது அரை சத்தங்களை பூர்த்தி செய்தனர்.இதனைத்தொடர்ந்து உடனே ஷிகர் தவான் 61, விராட் கோலி 65 ரன்கள் அடித்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களில் வெளியேற, இலக்கை அடைய முடியுமா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நீடித்தது.
ஆனால், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், தீபக் சாஹர் 34 பந்துகளில் 54 ரன்கள் அடித்து, விக்கெட்டை இழந்தார். சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 6 பந்துகளில் 6 ரன்கள் அடிக்கவேண்டிய சூழலில் இருந்தது. அப்போது, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களத்தில் இருந்தனர். 49.2 வது ஓவரில் டுவைன் பிரிட்டோரியஸ் பந்தில் யுஸ்வேந்திர சாஹல் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் தென்னாபிரிக்கா அணி 4ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரில் இந்திய அணியை மூன்று போட்டிகளிலும் வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாபிரிக்கா அணி முழுமையாக வென்று இந்தியா அணியை ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. தென்னாபிரிக்கா அணி பந்துவீச்சை பொறுத்தளவில், லுங்கி என்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ தலா 2 விக்கெட்டுகளும், டுவைன் பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.