ஒரேவொரு பந்தில் 16 ரன்களா..? எப்படி சாத்தியம்… மளைக்க வைத்த ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனை : வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan23 January 2023, 7:12 pm
பிக் பாஷ் லீக்கில் ஒரு பந்தில் 16 ரன்கள் எடுக்கப்பட்ட அரிய நிகழ்வு ஒன்று அரங்கேறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் அடுத்தடுத்து சதமடித்து அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தார். நேற்று முன்தினம் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் ஸ்மித் தனது நல்ல ஆட்டத்தை தொடர்ந்தார், அவர் போட்டியில் அரை சதத்தை அடித்தார். சுமித் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 66 ரன்கள் எடுத்து நாதன் எல்லிஸால் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
33 வயதான ஜோயல் பாரிஸ் வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரை ஸ்மித் எதிர்கொண்டார். இந்த ஓவரில் ஒரு பந்தில் 16 ரன்கள் எடுத்தார். பாரிஸ் வீசிய 3வது பந்து நோ-பாலாக மாற, அதனை சிக்சருக்கு அடித்தார், அவருடைய பெயருக்கு ஏழு ரன்களைப் பெற்றார். பாரிஸ் பின்னர் ஒரு வைட் பந்து வீசினார், அது பைன் லெக் சென்று எல்லையை தொட்டது. ஐந்து ரன்கள் கொடுத்தார். பின்னர் சுமித் ஒரு பவுண்டரி அடித்தார். ஆக மொத்தம் ஒரு பந்து வீச்சில் 16 ரன்கள் கிடைத்து உள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோவை பிக் பாஷ் லீக் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.