சிதறவிட்ட ஸ்டொய்னிஸ்… இலக்கை அலேக்காக தூக்கி அடிக்கும் மும்பை : கட்டாய வெற்றியில் லக்னோ அணி பலப்ரீட்சை!!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2023, 10:03 pm
ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI போட்டியில், முதலில் பேட் செய்த லக்னோ அணி 177/3 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. அதில் குயின்டன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து, களமிறங்கிய க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால், அரைசதம் எட்டவிருந்த பாண்டியா 49 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இறுதிவரை நிற்க இன்னிங்ஸ் முடிந்தது.
முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 89* ரன்களும், க்ருனால் பாண்டியா 49 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை அணியில் ஜேசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் இஷான் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை ஆடி வருகின்றனர். 4.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளனர்.