தடுமாறிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… புதிய சாதனை படைக்குமா சிஎஸ்கே..? 2வது இடத்துக்கு குறி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 10:06 pm

16-வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, ஹைதராபாத் அணியில் முதலில் ஹாரி புரூக் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஒருபுறம் ஹாரி புரூக் நிதானமாக விளையாடிக்கொண்டிருக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய ராகுல் திரிபாதி, ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், 16 பந்திற்கு 17 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் மார்கோ ஜான்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் களத்தில் இருக்க, 9 ரன்கள் எடுத்து சுந்தர் ரன்அவுட் ஆனார்.

முடிவில், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்களும், ராகுல் திரிபாதி 21 ரன்களும் குவித்துள்ளனர். சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 7 ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்துள்ளது. 135 ரன்களையும் விக்கெட் எடுக்காமல் சென்னை அணி வெற்றி பெற்றால் புதிய சாதனை படைக்கும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 433

    0

    0