சரிவில் இருந்து மீளும் சன்ரைசர்ஸ்… டஃப் கொடுக்குமா டெல்லி கேபிடல்ஸ் : 3வது வெற்றி யாருக்கு?

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 10:04 pm

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் டெல்லியின் அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதின.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் SRH அணி 9-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் DC அணி 10-வது இடத்திலும் இருக்கிறது.டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும மயங்க் களமிறங்கனிர், தொடக்கமே அதிர்ச்சி காததிருந்தது. காரணம் மயங்க் 5 ஙைனகளஙல ஆட்டமிழந்தார்.

பின்னர் ராகுல் திரிபாதி 10 ரன்கள், மார்கரம் 8 ரன்கள் மற்றும் ப்ரூக் டக் அவுட் ஆனதால் ஐதராபாத் அணி தடுமாறியது. ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி போட்ட க்ளாசன் அதிரடி காட்டினார்.

அபிஷேக் 67 ரன்களில் அவுட் ஆக, க்ளாசன் 27 பந்துகளில் 53 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்த 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி தொடக்க வீரர்களில் கேப்டன் வார்னர் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து பில் சால்ட் அதிரடியாக விளையாடினார், அவருடன் ஜோடி போட்ட மிர்செல் மார்ஸ் நிதானமாக ரன்களை சேர்த்து வருகின்றனார்.

6 ஓவர் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 436

    0

    0